சுடச்சுட

  

  பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியால் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஆபத்து நேரிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் கூறியுள்ளார்.

  புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) சார்பில் லாஸ்பேட்டையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உழவர்கரை கமிட்டி செயலர் லெனின்துரை தலைமை வகித்தார். பிரதேசச் செயலர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன், ராஜாங்கம், ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஜீவானந்தம், சேதுசெல்வம், சுப்பையா உள்ளிட்ட இடதுசாரி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் பேசியதாவது: முந்தைய பாஜக ஆட்சியிலும், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் கிராமப் புறத்திலும், நகர்ப் புறத்திலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாகியுள்ளன.

  நரேந்திர மோடி ஆளும் குஜராத் மாநிலம் சமூக நீதியில் பின் தங்கியுள்ளது.

  பெரிய வர்த்தக நிறுவனங்களுக்காக விவசாயிகளிடம் இருந்து விலை நிலங்கள் கட்டாயப்படுத்திப் பெரிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.

  அதிகமான பெண்களுக்கு ரத்தசோகை உள்ள மாநிலம் குஜராத். இளம் குழந்தைகள் சத்துக் குறைவால் இறக்கும் நிலையில் குஜராத் முன்னிலை வகிக்கிறது. நாட்டின் 17 மிகப் பெரிய மாநிலங்களில் வளர்ச்சி விகிதத்தில் 14-வது இடத்தில் தான் குஜராத் உள்ளது.

  இத்தகைய நிலையில் தான் குஜராத் வளர்ந்த மாநிலமாக சித்திரிக்கப்படுகிறது.

  பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியால் இந்தியாவின் மதச்சார் ன்மைக்கு ஆபத்து நேரிடும்.

  காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்று இடதுசாரி கட்சிகள் தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் சுதாசுந்தரராமன்.

  முன்னதாக லாஸ்பேட்டையில் துவங்கிய வேன் பிரசாரம் பெத்துசெட்டிப்பேட்டை சாந்திநகர், சேக்கநாதன்பேட்டை, சாமிப்பிள்ளைத்தோட்டம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai