சுடச்சுட

  

  வன்னியர்கள் எனக்கு எதிரானவர்கள் இல்லை: நாராயணசாமி

  By புதுச்சேரி,  |   Published on : 09th April 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வன்னியர்கள் எனக்கு எதிரானவர்கள் இல்லை. அவர்கள் நலனில் எனக்கு மிகுந்த அக்கறை உள்ளது என காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

  பாகூர் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் செவ்வாய்க்கிழமை தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

  முதல்வர் ரங்கசாமி கடந்த தேர்தலின் போது 158 வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளார்.

  காங்கிரஸ் அரசு செயல்படுத்திய திட்டங்களை நிறுத்தி விட்டு, 3 ஆண்டுகள் கழித்து அதே திட்டங்களுகு தொடக்க விழா நடத்தி வருகிறார் ரங்கசாமி. அனைத்துத் தரப்பு மக்களும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  என்னை வன்னியர் விரோதி எனக் கூறுகின்றனர். அதில் உண்மையில்லை. நான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது 17 வாரியங்கள் தலைவர் பதவியில் 15 வன்னியருக்குப் பதவி பெற்றுத் தந்தேன்.

  சோனியா காந்தியிடம் பேசி ரங்கசாமிக்கு முதல்வர் பதவியை பெற்றுத் தந்தேன். வன்னிய இனத்தவர் நலனுக்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். மத்தியில் பிற்பட்டோர் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது என்றார் நாராயணசாமி.

  இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, மீனவர் பிரிவுத் தலைவர் குப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai