சுடச்சுட

  

  விபத்தில் அரசு ஊழியர் சாவு: மோதிய பேருந்து உடைப்பு

  By விழுப்புரம்  |   Published on : 09th April 2014 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோட்டகுப்பம் அருகே அரசு பேருந்து மோதி புதுச்சேரி அரசு ஊழியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதனைத் தொடர்ந்து அவர்களது உறவினர்கள் மோதிய பேருந்தை சேதப்படுத்தினர்.

  புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (46). புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள அரசு காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளியில் சமையலராக பணிபுரிகிறார்.

  இவர், தனது நண்பர் இளங்கோவனுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார். சின்னமுதலியார் சாவடி அருகே செல்லும்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தண்டபாணி பேருந்து சக்கரத்தில் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இளங்கோவன் எதிர்திசையில் விழுந்ததால் அவர் லேசான காயங்களுடன் தப்பினார். இந்த விபத்து நடைபெற்றதும் பேருந்து ஓட்டுநர் தலைமறைவானார்.

  சம்பவத்தை கேள்விப்பட்டு திரண்டு வந்த தண்டபாணியின் உறவினர்கள் பேருந்தை அடித்து நொறுக்கினார். இச்சம்பவம் குறித்து கோட்டகுப்பம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்குள் தலைமறைவான பேருந்து ஓட்டுநர் செஞ்சியைச் சேர்ந்த சீனுவாசன், கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

  இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai