சுடச்சுட

    

    புதுவை தொகுதி திமுக வேட்பாளர் எச்.நாஜிம்முக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை கடை வியாபாரிகளிடம் வாக்குச் சேகரித்தனர்.

    மாநில மாணவரணி செயலர் இள. புகழேந்தி தலைமையில் முன்னாள் எம்எல்ஏ இரா.சிவா, இளைஞரணி மாநில அமைப்பாளர் முகமது யூனூஸ் மற்றும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள், அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடை கடையாகச் சென்று வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி திமுகவுக்கு ஆதரவு திரட்டினர்.

    மேலும் அண்ணா சிலை பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்குச் சேகரித்தனர். திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், கோபால், விடுதலைச் சிறுத்தைகள் மாநில செயலர் பொழிலன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai