சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் தீவிர பிரசாரம்

    By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் புதன்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
     பெரியார் சிலையில் தொடங்கிய பிரசாரம், முத்தியால்பேட்டை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.
     காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதக் கொள்கைகள், என்.ஆர்.காங்கிரஸ் அரசின் செயலற்ற தன்மை, மதவாத அரசியலை புறக்கணித்து மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் இடதுசாரி கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என விசுவநாதன் கேட்டுக் கொண்டார்.
     தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் ராஜாங்கம், பார்வர்ட் பிளாக் முத்து, ஆர்.எஸ்.பி. லெனின், நிர்வாகிகள் டி.ஜீவானந்தம், பிரபுபராஜ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai