சுடச்சுட

  

  இலவச மனைப்பட்டா கோரி  தேர்தலை புறக்கணிப்பதாகப் போராட்டம்

  By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வில்லியனுôர் அருகே இலவச மனைப்பட்டா வழங்காததைக் கண்டித்து உத்திரவாகினிப்பேட்டை கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக புதன்கிழமை கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
   வில்லியனுôர் அருகே உள்ள உத்திரவாகினிப்பேட்டை பகுதி மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, வீடுகளில் கருப்புக்கொடியேற்றி தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
   இப் பகுதியில் 350 குடும்பத்தினர் வரை வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று பல முறை அரசிடம் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
   ஏற்கெனவே எங்கள் முன்னோர்கள் பெயரில் வழங்கிய பட்டவையும் ரத்து செய்து விட்டனர். அதனை மாற்றித் தர வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
   தகவலறிந்த வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேசியதையடுத்து, மாலையில் கருப்புக்கொடிகளை அகற்றி போராட்டத்தைக் கைவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai