சுடச்சுட

  

  பெண்கள், இளைஞர்களிடம் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகம் உள்ளது என்றார் புதுவை மாநில பாஜக செயலர் எம். அருள்முருகன்.

  காரைக்காலில் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளுடன், பாஜக நிர்வாகிகள் இணைந்து என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த புதுவை மாநில பாஜக செயலரும், காரைக்கால் மாவட்ட பொறுப்பாளருமான எம். அருள்முருகன் கூறியது:

  காரைக்காலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாஜக, என்.ஆர். காங்கிரஸார் இணைந்து வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறோம். பெண்களிடமும், இளைஞர்களிடமும் நரேந்திர மோடி பிரதமராக வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. மோடி பிரதமரானால் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையும் என மக்கள் நம்புகிறார்கள்.

  புதுவையில் முதல்வர் ரங்கசாமி, உயர்கல்வி பயில்வோருக்கு இலவசக் கல்வி அளிப்பது இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  பிரதமர் அலுவலக இணை அமைச்சராக நாராயணசாமி இருந்தும், மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தவர் அவர். எனவே, நிச்சயமாக புதுவையில் காங்கிரஸ் தோற்கும் என்றார் அருள்முருகன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai