சுடச்சுட

  

  எனது திட்டங்களை காங்கிரஸ்  அரசு செயல்படுத்தியது: ரங்கசாமி

  By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த 2001-ல் நான் கொண்டு வந்த நலத் திட்டங்களையே காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வந்தது என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
   புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மடுகரையில் நடந்தது. கூட்டத்துக்கு பாட்கோ தலைவர் பிரசாந்த்குமார் தலைமை வகித்தார்.
   முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: நெட்டபாக்கம் தொகுதியை கூட்டணி கட்சியின் நெருக்கடியால் சட்டப்பேரவைத் தேர்தலில் விட்டுக் கொடுத்து விட்டேன். கடந்த தேர்தலைப் போலவே ராதாகிருஷ்ணனுக்கு இத் தொகுதியில் அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்.
   2001-ல் நான் கொண்டு வந்த திட்டங்களைத்தான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் செயல்படுத்தி வந்தனர். அவர்கள் எந்த ஒரு புது திட்டத்தையும் கொண்டு வரவில்லை. புதுச்சேரிக்காக மத்திய அரசிடம் நிதி கேட்டேன். ஆட்சியில் இருந்தவர்கள் நிதி அளிக்க முன் வந்தாலும், நாராயணசாமி அதை தடுத்து நிறுத்தினார்.
   கடந்த 25 ஆண்டாக எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வராத எம்பியாக அவர் செயல்பட்டு வருகிறார். அவரை நீங்கள் தூக்கி எறிய வேண்டும். மத்தியில் பாஜகதான் ஆட்சிக்கு வரும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அப்போது நமது மாநிலத்துக்கு அதிக நிதி பெற்று தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் என்றார் ரங்கசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai