சுடச்சுட

  

  என்.ஆர்.காங்கிரஸுக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஆதரவு

  By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தரப்படும் என மக்கள் வாழ்வுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
   இது தொடர்பாக மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் ஜெகன்நாதன், கிராம மக்கள் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலர் தெய்வீகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
   காங்கிரஸ் ஆட்சியில் வரலாறு காணாத ஊழல் நடந்துள்ளது. புதுச்சேரியின் கடன் ரூ. 5,680 கோடியாக உள்ளது. அதை தள்ளுபடி செய்ய காங்கிரஸ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர், மத்திய உள்துறை மூலம் புதுவை அரசுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுக்கிறது. நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்களை தராமல் காங்கிரஸ் ஏமாற்றுவதால் அக்கட்சியை எதிர்க்கிறோம்.
   காங்கிரúஸாடு கூட்டணியில் இருந்து கொண்டு ஈழத்தில் நடந்த படுகொலை, 2-ஜி ஊழல் ஆகியவற்றால் திமுகவை எதிர்க்கிறோம். வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கு உள்பட பல்வேறு பிரச்னைகளால் அதிமுகவுக்கு ஆதரவில்லை.
   புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் கட்சி தொடங்கியதாலும், மாநில அந்தஸ்தை முன்வைப்பதாலும் என்.ஆர்.காங்கிரஸýக்கு விமர்சனத்துடன் கூடிய ஆதரவை அளிக்கிறோம் எனத் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai