சுடச்சுட

  

  காரைக்கால் ஜெயவீரபால ஆஞ்சனேயர் கோயில் குடமுழுக்கு

  By  காரைக்கால்  |   Published on : 10th April 2014 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஜெயவீரபால ஆஞ்சனேயர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
   காரைக்கால் காமராஜர் சாலை, தோமாஸ் அருள் வீதி சந்திப்பில் அமைந்துள்ளது இக் கோயில். இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
   இந்தநிலையில், பக்தர்கள் ஒருங்கிணைந்து இக்கோயிலுக்கு அருகே புதிதாக நிலம் விலைக்கு வாங்கப்பட்டு, தனியாக ஆஞ்சனேயர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.
   இதற்காக 4 கால யாகபூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. புதன்கிழமை காலை 4-ம் கால பூஜை நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
   காலை 10 மணிக்கு விமான கலசங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர்.
   நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஏ. ராஜராஜன் வீராசாமி உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
   இக்கோயில் கட்டுமானம் உள்ளிட்ட குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவின் தலைவர் ராம. வெற்றிச்செல்வன், செயலர் ஆர். கோவிந்தராஜ், பொருளாளர் த. பக்கிரிசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai