சுடச்சுட

  

  தேர்தல் துறை அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் புதுச்சேரி காலாப்பட்டில் முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை திறந்த ஜீப்பில் செய்ய இருந்த பிரசாரம் ரத்தானது.
   புதுச்சேரியில் பாஜக கூட்டணியிலுள்ள என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து புதுவை, காரைக்காலில் 28 தொகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.
   இந்நிலையில் திறந்த ஜீப்பில் புதன்கிழமை முதல் ரங்கசாமி வாக்குச் சேகரிப்பார் என்று தெரிவித்திருந்தனர். காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் விநாயகர் கோயில் அருகே கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். ஆனால், முதல்வரும், வேட்பாளரும் அங்கு வரவில்லை.
   இதையடுத்து, கட்சியினர் தலைமையிடம் விசாரித்தபோது பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், வியாழக்கிழமை மாலை இதே இடத்தில் பிரசாரம் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.
   தேர்தல் துறை அனுமதி பெறுவதில் தாமதம்:
   திறந்த ஜீப்பில் தொடங்க இந்த பிரசாரத்தை முதல்வர் ஏன் ரத்து செய்தார் என்று என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியது: தேர்தல் பிரசாரம் செய்ய மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். பிரசாரத்துக்கான கடிதம் தாமதமாகத்தான் செவ்வாய்க்கிழமை தரப்பட்டது.
   அங்கிருந்து உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. புதன்கிழமை தான் அனுமதி கிடைத்தது. அதனால் புதன்கிழமை பிரசாரம் வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது. வியாழக்கிழமை மாலை காலாப்பட்டில் முதல்வர் பிரசாரம் தொடங்கும் எனத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai