சுடச்சுட

  

  கைலாசநாதர் கோயில் பிரம்மோத்சவம்: ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா

  By dn  |   Published on : 10th April 2014 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, மின்சார சப்பரப் படலில் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ கைலாசநாதர் வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

  காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் பிரம்மோத்சவம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.

  செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீ சாகம்பரியம்மன் திருக்கயிலையிலிருந்து வந்து சுவாமியை பூஜிக்கும் நிகழ்ச்சியும், ஸ்ரீ கைலாசநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் மின்சார சப்பரப் படலில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக 12-ம் தேதி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறவுள்ளது. 15-ம் தேதி தெப்பம் நடைபெறவுள்ளது.

  நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஏ. ராஜராஜன்வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai