சுடச்சுட

  

  சட்டம் ஒழுங்கு பிரச்னை: முதல்வரே பொறுப்பேற்க வேண்டும்,  ஆம் ஆத்மி கட்சி

  By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு முதல்வர் ரங்கசாமியே பொறுப்பேற்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
   இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வி.ரங்கராஜன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
   புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸýம், எதிர்க் கட்சியான காங்கிரஸýம் ஏமாற்று அரசியலை நடத்தி மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
   தற்போது ரவுடி, சமூக விரோதிகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளன.
   பட்டப்பகலில் அடகுக்கடை வியாபாரி கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு ரங்கசாமி தான் பொறுப்பேற்க வேண்டும்.
   சந்தர்ப்பவாத அரசியலின் உச்சக் கட்டமாக புதுவை அரசியல் திகழ்கிறது. ராதாகிருஷ்ணன் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக உள்ளார். பதவிக்காக அவர் கட்சி மாறியுள்ளார்.
   அதேபோல் புதுவையின் வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் முட்டுக்கட்டையாக நாராயணசாமி இருந்தார். இப்பொழுது அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாகக் வாக்குறுதியளிக்கிறார்.
   நாராயணசாமி, ரங்கசாமி ஆகியோரிடத்தில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை.
   புதுவைக்கு எம்பியாக தேர்வானால் கட்சி பாகுபாடின்றி மத்திய அரசிடம் வாதிட்டு புதுவை முன்னேற்றத்துக்கு அனைத்து நிதியுதவிகளையும் பெற்றுத் தருவேன்
   என்றார் ரங்கராஜன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai