Enable Javscript for better performance
\\\"சிறுபான்மையினர் உணர்வுக்கு மதிப்பு தரும் இயக்கம் திமுக\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சிறுபான்மையினர் உணர்வுக்கு மதிப்பு தரும் இயக்கம் திமுக'

    By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுபான்மையினர் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் ஒரே இயக்கம் திமுக தான் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலர் காதர் மொய்தீன் கூறினார்.
     புதுச்சேரி திமுக வேட்பாளர் நாஜிம்மை ஆதரித்து சின்ன மணிக்கூண்டு, வில்லியனூர், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
     ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சிறுபான்மை மக்களுக்காக பாடுபட்டு, அவர்களது உணர்வுகளை மதிக்கும் ஒரே இயக்கம் திமுக தான். மதவாதம், மனிதநேயத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
     மத்திய காங்கிரஸ், புதுவை என்.ஆர். காங்கிரஸ், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுகள் சிறுபான்மையினத்தவருக்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளனர். இதை நான் மறுக்கவில்லை. ஆனால் உணர்வுகளுக்கு மதிப்புத் தருவது திமுக தான்.
     சட்டரீதியாக ராமர்கோயில் கட்டுவோம் என பாஜக கூறுவது மதவாதத்தைத் தூண்டும் செயலாகும். ராமர்கோயில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. மசூதியை இடித்து விட்டு கோயில் கட்ட வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.
     திமுக வேட்பாளர் நாஜிமுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்றார் காதர் மொய்தீன்.
     இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனூஸ், மாநிலத் தலைவர் ஹைரூல்லா, செயலர் ஜிகினி, பொருளாளர் ஷேக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai