சுடச்சுட

  

  சிவராந்தகம் மோதல் சம்பவம்:  இருதரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு

  By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவராந்தகம் மோதல் சம்பவத்தில் இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   வில்லியனூர் அருகே உள்ள சிவராந்தகத்தில், முதியவர் ஒருவரின் இறுதிச் சடங்கின் போது, ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
   திங்கள்கிழமையும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட சிவராந்தகம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காலை புதுவை-விழுப்புரம் சாலையில் அரியூர் சர்க்கரை ஆலை முன்பு மறியல் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூர், மங்கலம் போலீஸார் தடியடி நடத்தி மறியல் செய்தவர்களை கலைத்தனர். இச் சம்பவங்களில், இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். 4 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.
   புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஓம்வீர்சிங் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி சமாதானப்படுத்தினர்.
   சிவராந்தகம் பகுதி மோதல் சம்பவம் குறித்த புகார்களின் பேரில், இரு தரப்பைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, நடராஜன் உள்ளிட்ட 12 பேர் மீது, மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   மறியல் செய்தவர்கள் மீது வழக்கு: இச் சம்பவத்தில், அரியூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேர் மீது வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப் பிரச்னை தொடர்பாக, வில்லியனூர் துணை ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai