சுடச்சுட

  

  காரைக்கால் அருகே மது அருந்த பணம் தராததால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் தீக்குளித்த கணவரும், அவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

  காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதி கீழக்காசாக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வெங்கடேசன் (35). இவர் சிற்ப வேலை செய்துவந்தார். இவரது மனைவி கமலாதேவி (32). திருமணமாகி ஓராண்டாகிறது.

  வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் மது குடிக்க பணம் தருமாறு மனைவியிடம் கேட்டாராம் வெங்கடேசன். அதற்கு அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசன் திடீரென அங்கிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதை பார்த்த கமலாதேவி, கணவரை காப்பாற்ற அவரை பிடித்துள்ளார். அப்போது அவரது உடைகளிலும் தீப்பற்றியது. இவர்களின் அலறன் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருப்போர் ஓடிவந்து அவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் காரைக்கால் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு வெங்கடேசன், கமலாதேவி இருவரும் 6 மணியளவில் உயிரிழந்தனர். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai