சுடச்சுட

  

  நாராயணசாமி, ரங்கசாமிக்கு ஆதரவாக தேர்தல்துறை செயல்படுகிறது

  Published on : 10th April 2014 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமிக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் ஆதரவாக காரைக்கால் தேர்தல் துறை செயல்படுவதாக புதுவை திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிம் குற்றம்சாட்டியுள்ளார்.

  காரைக்காலில் நெடுங்காடு பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவேட்டக்குடி, பூவம், வரிச்சிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிம் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுவை தொகுதியில் திமுகவினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுகிறார்கள். தொகுதி முழுவதும் திமுகவுக்கு சாதகமான அலை வீசுகிறது. ஆனால், காரைக்காலில் தேர்தல் துறை அலுவலர்கள் அனைவரும் திமுகவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி, புதுவை முதல்வர் என். ரங்கசாமியின் கட்டளைக்கு பணிகிறார்கள். ஒட்டுமொத்த காரைக்கால் தேர்தல் துறையினரையும் மாற்றியாக வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு திமுக புகார் தெரிவிக்கும் என்றார். அவர் மேலும் கூறியது, புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பாமக தனித்தனியாக போட்டியிடுகிறது. எந்த சூழலிலும் என்.ஆர். காங்கிரஸýக்கு பாமக மறைமுகமாக ஆதரவு தராது என நினைக்கிறேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai