சுடச்சுட

    

    காரைக்காலில் அண்மைக்காலமாக மத்தி மீன்கள் அதிகளவில் மீனவர்கள் வலையில் சிக்குகின்றன. இவை கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு அனுப்பப்படுவதால், நல்ல வருவாய் கிடைப்பதாக மீனவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
     மார்ச், ஏப்ரல் மாதங்களில் மத்தி மீன்கள் காரைக்கால் உள்ளிட்ட கடல் பகுதியில் கிடைக்கக் கூடிய சீசனாகும். கரையிலிருந்து சுமார் 2, 3 கி.மீ. தொலைவிலேயே கூட்டம் கூட்டமாக இவை உலாவிக் கொண்டிருக்கும். கடந்த சில தினங்களாக கடலுக்குள் செல்லும் மீனவர்கள் படகு நிறைய மத்தி மீன்களுடன் கரை திரும்புகின்ரனர்.
     காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் உள்ளிட்ட சில கிராம மீனவர்கள் மட்டுமே இந்த மீனை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
     இவர்கள் அந்த கிராமத்திற்கு மீன்களை இறக்கும்போது, கேரளம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் முகவர்கள் லாரிகளில் மீன்களை ஏற்றிச் செல்கின்றனர். மத்தி மீன் சீசன் மீனவர்களுக்கு லாபத்தை தரக்கூடியதாக உள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
     இதுகுறித்து மீனவர்கள் தெரிவித்தது: ஆண்டில் 2 மாதங்கள் மட்டுமே நாகை, காரைக்கால், கடலூர் வரையிலான பகுதியில் மத்தி மீன்கள் கிடைக்கும். இந்த மீனை கேரள மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு பைபர் படகு மீன் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை முகவருக்கு விற்கப்படுகிறது என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai