சுடச்சுட

  

  வெற்றிக் கனவு காண்கிறார் முதல்வர்:  நாராயணசாமி

  By  புதுச்சேரி,  |   Published on : 10th April 2014 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விடலாம் என முதல்வர் ரங்கசாமி பகல் கனவு காண்கிறார் என காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கூறினார்.
   ஏம்பலம் தொகுதிகளில் புதன்கிழமை திறந்த ஜீப்பில் வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: காங்கிரஸ் அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்த ரங்கசாமி அனைத்துத் திட்டங்களையும் நிறுத்தி விட்டார்.
   3 ஆண்டுகளுக்குப் பின் நிறுத்திய திட்டங்களை தேர்தலுக்காக செயல்படுத்துகிறார். ஒற்றை அவியல் அரிசி திட்டம், இலவச கோதுமை திட்டம், சென்டாக் உதவித்தொகை போன்றவை தேர்தலுக்காக வழங்கப்படுகிறது. ரொட்டி, பால் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
   ரங்கசாமி கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களையும், மீனவர்களையும் ஒட்டு மொத்தமாக வஞ்சித்து விட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய சிறப்புக்கூறு நிதியை வேறு திட்டங்களுக்கு மாற்றி வஞ்சித்து விட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை. கடல் அரிப்பைத் தடுக்க துண்டில் முள் வளைவு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார். ஆனால் செய்யவில்லை. மானிய விலையில் டீசல், பனித்திட்டில் டீசல் பங்க் அமைக்க வில்லை.
   சுனாமி பாதிக்கப்பட்டபோது பல மாநில முதல்வர்களிடமிருந்து ரூ.900 கோடி நிதியை பெற்றுத் தந்தேன். ஆனால் ரங்கசாமி ஒரு வீட்டைக்கூட கட்டி முடிக்கவில்லை. ரூ.1000 கோடியில் வீடுகள் கட்ட திட்ட அறிக்கையை நான் முதல்வர் ரங்கசாமியிடம் அளித்தேன். அந்த திட்ட அறிக்கையை முதல்வர் ரங்கசாமி செயல்படுத்த வில்லை.
   கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளைக் கூறி வெற்றி பெற்றதைப் போல, எம்பி தேர்தலிலும் பொய்களைக்கூறி வெற்றி பெறலாம் என முதல்வர் பகல் கனவு காண்கிறார் என்றார் நாராயணசாமி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai