சுடச்சுட

    

    அஞ்சல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு

    By காரைக்கால்,  |   Published on : 11th April 2014 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     காரைக்கால் வாக்காளர்களுக்கு புதுவை சுயேச்சை வேட்பாளர் அனுப்பிய கடிதம் குறித்து புகாரின்பேரில், தேர்தல் பறக்கும் படையினர் அஞ்சல் நிலையத்தில்  அவற்றை ஆய்வு செய்தனர்.

    புதுவை தொகுதியில் சுயேச்சையாக மக்களவை உறுப்பினர் பேராசிரியர்  மு. ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் காரைக்காலில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு கடிதம் அனுப்பி வருகிறார். இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டுமென காரைக்கால் தேர்தல் பொதுப் பார்வையாளர் எம். அங்கமுத்துக்கு தொலைபேசி மூலம் சிலர் வியாழக்கிழமை புகார் கூறினர்.

    இதுகுறித்து அவரது அறிவுறுத்தலின்படி வட்டாட்சியர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், காரைக்கால் தலைமை அஞ்சல்  நிலையத்துக்குச் சென்றனர். அங்கு சுயேச்சை வேட்பாளர் மு. ராமதாஸ்,  வாக்காளர்களுக்கு அனுப்பியிருந்த கடிதங்களை பார்வையிட்டனர். ஒருசில கடிதங்களை முகவரிக்குரியவரை அழைத்து பிரித்துப் பார்த்தனர். பின்னர், அவைகளை அஞ்சல் நிலைய அதிகாரியிடம்  ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து பறக்கும் படையினர்  கூறும்போது, வேட்பாளர் வாக்காளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வந்த புகாரின்பேரில் ஆய்வு செய்தோம். கவரினுள் பணம் இருக்கிறதா என்பதை பார்த்தோம். வாக்காளர்களுக்கு தாம் எம்.பி. யாக இருந்த காலத்தில் செய்த சாதனைகள் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

    வேறு எந்தப் பொருளும் கவரினுள் இல்லை. ஒரு நாளில் 800 கடிதங்கள் வந்துள்ளது. கடந்த 2 நாள்களாக சுமார் 800 கடிதங்கள் வரை வந்துள்ளதாக அஞ்சல் நிலையத்தார் தெரிவித்தனர். கவரில் உரிய தொகைக்கு ஸ்டாம்ப் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கான தொகை வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai