சுடச்சுட

    

    அனுமதி பெறாமல் தேர்தல் அலுவலகம் திறப்பு: மாநில அதிமுக பொருளாளர் மீது வழக்கு

    By புதுச்சேரி,  |   Published on : 11th April 2014 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூரில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்ததாக அதிமுக மாநில பொருளாளர் பாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரியில் திருக்கனூர் கடைவீதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. அனுமதியின்றி  தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டதால், தேர்தல் துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செம்மலை எம்பி இடையிலேயே பேச்சை நிறுத்தி விட்டுப் புறப்பட்டார்.

    தேர்தல் துறை அதிகாரி சத்யநாராயணா இச்சம்பவம் தொடர்பாக திருக்கனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக அதிமுக மாநில பொருளாளர் பாஸ்கர் மீது காவல்துறையினர் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai