சுடச்சுட

    

    அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ்

    By புதுச்சேரி,  |   Published on : 11th April 2014 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி தாகூர் அரசுக் கல்லூரியில் நிகழ்ச்சி அமைப்பாளர் பாடப் பிரிவு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    கல்லூரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத் துறை சார்பில் பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் 6 மாத கால நிகழ்ச்சி மேலாண்மை பாடப் பிரிவு (உஸ்ங்ய்ற் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்தியா முழுவதும் உள்ள ஈவெண்ட் மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்களின் பாடங்களே இங்கும் கற்பிக்கப்படுகின்றன. மேலாண்மை, சந்தை வாய்ப்பு, கணக்கியல், திட்டமிடல் மற்றும் செயலாக்கம், மனிதவலம், போக்குவரத்து, நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பி.பி.ஏ, பி.காம். படித்த மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர்.

    சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு முதல்வர் தமிழரசி தமிழ்மணி தலைமை வகித்தார். சுற்றுலாத் துறைத் தலைவர் பிரதிமாகுமாரி வரவேற்றார்.

    தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் பி.மாலதி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி

    னார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai