சுடச்சுட

  

  என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி புதுவையில் ஏப்ரல் 22 வரை தொடர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

   இது தொடர்பாக பொதுச் செயலர் வி.பாலன் வெளியிட்ட அறிக்கை:

   முதல்வர் ரங்கசாமி 11-ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடியிலும், 12-ம் தேதி காலை முதல் இரவு மங்கலம், வில்லியனூர், தட்டாஞ்சாவடி தொகுதிகளிலும்,13-ம் தேதி பாகூர், நெட்டப்பாக்கம், ஏம்பலம் தொகுதிகளிலும், 14-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உருளையன்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு தொகுதிகளிலும், 15-ம் தேதி மாஹே தொகுதி முழுவதும் பிரசாரம் செய்கிறார்.

   16-ம் தேதி காலை முதல் இரவு வரை காமராஜர் நகர், உப்பளம், அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளிலும், 17, 18 தேதிகளில் காரைக்கால் பிராந்தியம் முழுவதும் முதல்வர் பிரசாரம் செய்கிறார்.

   பின்னர் 19-ம் தேதி ஊசுடு, மண்ணாடிப்பட்டு தொகுதியிலும், 20-ம் தேதி ஏனாம் தொகுதி முழுவதுமும்,

  21-ம் தேதி உழவர்கரை, நெல்லித்தோப்பு தொகுதிகளிலும் 22-ம் தேதி இந்திரா நகர், கதிர்காமம் தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார். ஆங்காங்கே உள்ள கட்சியினர் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றார் பாலன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai