சுடச்சுட

  

  சுயேச்சையாக களம் இறங்கியவர் என்ஆர்.காங்கிரஸ் தொகுதி ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு

  By புதுச்சேரி,  |   Published on : 11th April 2014 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதி போட்டியிலிருந்து வேட்புமனுவை திரும்பப் பெற்ற சுயேச்சை வேட்பாளர் பெம்மாடி துர்காபிரசாத், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஏனாம் தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

   புதுவை மாநிலம் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியமாக பிரிந்துள்ளது.  இதில் தேசியக் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கும்போது 4 பிராந்தியங்களிலும் தேர்தல் பணியாற்ற கட்சியினர் இருப்பார்கள். ஆனால் மாநில கட்சிகள் சார்பில் மாஹோ, ஏனாமில் தேர்தல் பணியாற்ற ஆள்கள் கிடைப்பது அரிதுதான். ஏனெனில் அண்டை மாநிலமான தமிழகத்தில் அதிமுக, திமுக, புதுவை, காரைக்காலில் இருந்து வருகின்றனர்.

   திராவிட கட்சியினருக்கும் கேரளா மாநிலத்தில் உள்ள மாஹே, ஆந்திர மாநிலத்தில் உள்ள  ஏனாமில் பெரியளவில் ஆதரவு இல்லை. அதே நேரத்தில் புதுவையிலேயே தோன்றிய மாநில கட்சியான என்ஆர்.காங்கிரஸ் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அந்த 2 தொகுதிகளையும் கூட்டணி பேச்சுவார்த்தையில் கூட சேர்க்கவில்லை.

   இந்நிலையில், மாஹேயில் கூட்டணி கட்சியான பாரதீய ஜனதாவுடன் பணிக்குழு அமைக்கும் வேலையில் ஈடுபட்டனர்.

   ஏனாம் பிராந்தியத்தில் இருந்து சுயேச்சையாக போட்டியிட பெம்மாடி துர்காபிரசாத்  என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தது தெரியவந்தது.  அவரை அணுகி வேட்புமனுவை திரும்பப் பெறச்செய்ய என்.ஆர்.காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.

   இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் அவர் மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து உடனடியாக அவர் ஏனாம் தொகுதி என்ஆர்.காங்கிரஸ் தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். புதுவையில் இதுவரை என்ஆர்.காங்கிரஸýக்கு தொகுதி நிர்வாகிகள் என யாரும் அறிவிக்கப்படவில்லை குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai