சுடச்சுட

  

  ஜாதி மோதலை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது: அதிமுக புகார்

  By புதுச்சேரி,  |   Published on : 11th April 2014 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மாநிலத்தின் கிராமப்புறங்களில் ஜாதி ரீதியான மோதலைத் தடுக்காமல் என்.ஆர். காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்க்கிறது என அதிமுக குற்றம் சாட்டி

  யுள்ளது.

  புதுவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு ஆதரவாக காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் வீதி, வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்து அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் பேசியதாவது:

  கடந்த 3 ஆண்டாக புதுவை அரசு யார் எங்கே, எந்த சிலையை வைத்தாலும் கண்டுகொள்ளவில்லை.  இதனால் சில இடங்களில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

  கிராமப்புறங்களில் ஜாதிரீதியாக மக்கள் பிளவுபடுவதை அரசு வேடிக்கைதான் பார்த்தது.

  அண்மையில் சிவராந்தகத்தில் இரு தரப்பு  மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி அடக்குமுறையைக் கையாண்டுள்ளனர்.   இதைப்போல சட்ட ஒழுங்கு பிரச்னைகள் எதிலும் உறுதியான  நடவடிக்கையை அரசு எடுக்காததால் மக்கள்  பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

  காலாப்பட்டு சிறையிலிருந்து ரவுடிகள் செல்போன் மூலம் மக்களை மிரட்டி பணம் வசூலித்தனர். தொழிலதிபர்களின் குழந்தைகள் கடத்தி பணம்  பறித்தனர்.

  இது குறித்து ரங்கசாமி எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. சிறையில் ஜாமர் கருவி  பொருத்தப்பட்டது. அக்கருவியை கைதிகள் செயலிழக்கச் செய்தனர். அதையும் இந்த அரசு வேடிக்கைதான் பார்த்தது.

  நாராயணசாமி புதுவைக்கு பெரியளவில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

  தேர்தலுக்காக ரங்கசாமியும், நாராயணசாமியும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். இருவர் கூறும் புகார்களும் உண்மைதான்.

  இருவரையும் புறக்கணித்து அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

  பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்

  புதுச்சேரி, ஏப். 10: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர் வியாழக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழ்த் துறையைச் சேர்ந்த மாணவர் எஸ்.ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த வியாழக்கிழமை பெண்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக பல்கலைக்கழக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை 24 மணி நேரம் பிடித்து வைத்திருந்தனர். அவரை மிரட்டி மாணவிகள் விடுதியில் நுழைந்ததாக வாக்குமூலம் பெற்றுக் கொண்டும், தாக்கியும் உள்ளனர். பேராசிரியர்கள் ஹரிஹரன், பூஷன் சுதாகர் ஆகியோர் சேர்ந்து மாணவனை மிரட்டியுள்ளனர்.

  இது தொடர்பாக விசாரணையில், சம்பவத்தின் போது, தான் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்ததற்கான விடியோ ஆதாரம் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  ஆனால் அவரை தாக்கி திங்கள்கிழமை தான் விடுவித்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

  இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி துணை வேந்தரை மாணவர்கள் சந்திக்க முயன்றனர். துணை வேந்தர்  சந்திரா கிருஷ்ணமூர்த்தியிடம் 4 பக்கங்கள் கொண்ட புகாரையும் அளித்தனர்.

  மாணவர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸாரிடமும் புகார் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai