சுடச்சுட

  

  திருக்கனூரில் உள்ள துணை சபாநாயகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினர்.

  திருக்கனூர் அருகே உள்ள கே.ஆர்.

  பாளையம் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தல் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு துணை சபாநாயகர் டி.பி.ஆர். செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்தின் போது வந்த பறக்கும் படையைச் சேர்ந்த துணை வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இரவு நேரத்தில் அனுமதியின்றி ஒரே இடத்தில் அதிகளவில் கூட்டத்தினர் இருக்கக் கூடாதென அவர்களை கலைத்து விட்டுச் சென்றனர்.

  இதனையடுத்து, திருக்கனூர் மார்க்கெட் வீதியில் உள்ள துணை சபாநாயகர் டி.பி.ஆர். செல்வம் வீட்டில், பறக்கும் படையினர்  ஆய்வு செய்தனர். வீட்டில் உள்ள அவரது அலுவலகத்தையும் சோதனையிட்டனர். இதற்கு என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து குழுவினரை முற்றுகையிட்டனர்.

  தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சால்வைகள் வைத்துள்ளதாக கிடைத்த புகாரின் பேரில், சோதனையிட்டதாகவும், அப்படி எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்

  தனர்.

  அப்போது அங்கு வந்த துணை சபாநாயகர் செல்வம், கட்சியினரை சமாதானப்படுத்தினார். இதன்பின் தேர்தல் பறக்கும் படையினர் புறப்பட்டுச் சென்றனர்.

  பாரபட்சமாக சோதனை நடத்துவது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai