சுடச்சுட

  

  பாஜகவுடன் கூட்டணி வைத்த என்.ஆர். காங்கிரஸ் பெயரை மாற்ற வேண்டும்

  By புதுச்சேரி  |   Published on : 11th April 2014 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதவாத பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

  புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விசுவநாதனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வந்த அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  புதுச்சேரி வாக்காளர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். காங்கிரஸ் என பெயர் வைத்துள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி மதவாத பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளது மக்களின் சிந்தனைக்கு மாறானது.

  காங்கிரஸ் என பெயர் வைத்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதால் அக்கட்சி தனது பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். 

  இக்கூட்டணியால் புதுவையில் எதிர்காலத்தில் பல தீமைகளை உருவாக்கக் கூடும். இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து தேர்தலை சந்தித்து வருகிறோம். இம்முயற்சி தமிழகத்திலும், புதுவையிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

  மீண்டும் ராமர்கோயில் கட்டுவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. 

  தமிழகத்தில் மதிமுக, பாமக, தேமுதிக அமைத்துள்ளது சந்தர்ப்பவாதக் கூட்டணி. முதல்வர் ஜெயலலிதா மோடி குறித்தோ, பாஜக குறித்தோ எந்த கருத்தையும் இதுவரை ஏன் தெரிவிக்கவில்லை.

  கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மக்கள் விரோதப் போக்கால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

  மதவாத கொள்கை, காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து அவர்களுக்கு மாற்று என்பது இடதுசாரிகள் என்பதை மக்களிடம் விளக்கி வருகிறோம்.

  புதுச்சேரி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விசுவநாதனை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.

  இந்நிகழ்ச்சியின் போது பிரதேச செயலர் வி.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், முருகன், நிலவழகன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai