சுடச்சுட

  

  பாஜக தலைவர்கள் படங்களின்றி என்.ஆர். காங்கிரஸ் துண்டுப்பிரசுரம் விநியோகம்

  By காரைக்கால்,  |   Published on : 11th April 2014 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநள்ளாறில் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படங்களின்றி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் துண்டுப்பிரசுரம்  அச்சடித்து வெளியிட்டு வருவது குறித்து பாஜக அதிருப்தி தெரிவித்துள்ளது.

  புதுவையில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தைப் போன்று மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட் கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம்பெறவில்லை. பாமக தனித்து இத்தொகுதியில் போட்டியிடுகிறது.

  பாமகவுக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. கூட்டணி முடிவு தெரிவதில் தாமதம் ஏற்பட்டதால், பிரசாரத்துக்கான துண்டுப்பிரசுரம் உள்ளிட்டவை தயாரிப்பதில்  பாஜக, என்.ஆர். காங்கிரஸýக்கு பாதிப்பு  ஏற்பட்டு தள்ளிக்கொண்டே போனது.

  இந்நிலையில், காரைக்கால் பகுதியில்  என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் துண்டுப்பிரசுரம் புதுச்சேரியிலிருந்து வந்துள்ளது. இதில் பாஜக தலைவர்கள், என்.ஆர்.காங்கிரஸ்  தலைவர்கள் படங்கள் உள்ளன.

  ஆனால், திருநள்ளாறு சட்டப்பேரவைத்  தொகுதிக்குள்பட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான பி.ஆர். சிவா,  பாஜக தலைவர்களான நரேந்திர மோடி உள்ளிட்ட யாருடைய படங்களும் இல்லாமல், முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் ராதாகிருஷ்ணன், தனது படத்துடன் கலரில் துண்டுப்பிரசுரம் அச்சடித்து வாக்காளர்களிடம் வழங்கி வருகிறார்.

  காரைக்கால் நகரப் பகுதியில் பாஜக  தலைவர்களுடன் துண்டுப்பிரசுரம் விநியோகித்தாலும், திருநள்ளாறு தொகுதியில் மட்டும் பாஜக தலைவர்களின்றி பேரவை உறுப்பினர் தனியாக அச்சடித்து விநியோகித்துவரும் துண்டு பிரசுரம் அறிந்து பாஜகவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

  திருநள்ளாறு தொகுதியில் அம்பகரத்தூர் வட்டாரத்தில் உள்ள நல்லம்பல் உள்ளிட்ட இடங்களில் கணிசமான இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பகுதியில் பாஜக தலைவர்கள் படத்துடன் துண்டுப்பிரசுரம் விநியோகித்தால்,  என்.ஆர். காங்கிரஸýக்கு வாக்குகள் அதிகமாகக் கிடைக்காது, எதிர்காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் தமக்கு பாதிப்பு ஏற்படும் என்ற  நோக்கிலேயே பேரவை உறுப்பினர்  இம்மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai