சுடச்சுட

  

  "புதுவைக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க அதிமுக வெற்றி பெற வேண்டும்'

  By காரைக்கால்  |   Published on : 11th April 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசிலிருந்து புதுவை மாநில மக்களுக்கான அனைத்து உரிமைகளும் கிடைக்க அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தமிழக அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.

  புதுவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கத்தை ஆதரித்து புதுவை தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், தமிழக உணவு அமைச்சருமான ஆர். காமராஜ் புதன்கிழமை இரவு திருமலைராயன்பட்டினம், காரைக்கால் புதிய பேருந்து நிலையப் பகுதி, அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து பேசியது:

  தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலை வீசுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டதாகும். புதுச்சேரியில் தமிழக முதல்வர் அண்மையில் வந்து பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து புதுவை தொகுதியிலும் அதிமுக அலை வீசத் தொடங்கிவிட்டது.

  தமிழகத்தில் விலையில்லா பொருள்கள் பல அளிக்கப்படுகிறது. எல்லாவற்றாலும் மக்கள் பயனடைகிறார்கள். ஆனால், புதுவையில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை 3 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. இதனால்  முதல்வர் ரங்கசாமி மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர்.

  தமிழகத்தைப்போன்று, புதுவை மக்கள் மீதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அக்கறை கொண்டுள்ளார். புதுச்சேரி, காரைக்காலில் அதிமுக பிரசாரம் செய்யும்போது, மக்கள் எழுச்சியுடன் வருகின்றனர். புதுவையிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதியானதாகும் என்றார் அவர்.

  பிரசாரத்தின்போது, புதுவை தொகுதி வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வி.கே. கணபதி, வி.எம்.சி.வி. கணபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai