சுடச்சுட

  

  புதுவையில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: முதல் முறையாக தொடக்கம்

  By புதுச்சேரி  |   Published on : 11th April 2014 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநிலத்திலேயே முதன் முறையாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

  புதுவையில் முதன் முறையாக அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையம் நடப்பாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.  இதுவரை தமிழகத்துக்குச் சென்று விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. தற்போது இந்த ஆண்டு முதல் புதுவையிலேயே இப்பணியை ஆசிரியர்கள் செய்கின்றனர்.

  உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள இமாகுலேட் பள்ளியில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. பாடத்துக்கு 200 ஆசிரியர்கள் வீதம் ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 20 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  முதன்மை தேர்வாளர், உதவி தேர்வாளர், மதிப்பெண் ஆய்வு அதிகாரி என 3 பிரிவுகளாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: புதுச்சேரியில் நடப்பாண்டு முதல் பிளஸ்-2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இரு வாரங்கள் நடைபெற்றன.

  பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 19-ம் தேதி நிறைவடையும். வரும் 21-ம் தேதி விடைத்தாள்களை தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்தில் ஒப்படைப்போம் எனத் தெரிவித்தனர். 

  விடைத்தாள் திருத்தும் பணியின் போது வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai