சுடச்சுட

  

  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் ஏப்ரல் 22, 23, 24 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

   இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுப்பிரமணியேஸ்வரராவ் வெளியிட்ட அறிக்கை:

  நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கலால்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 7 முக்கியத் வழித் தடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சட்டத்துக்குப் புறம்பாக மது கடத்துதல், பதுக்கி வைத்தல், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தல் போன்ற குற்றங்களைக் கண்காணிக்க 4 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 24 மணி நேரமும் ரோந்துப் பணி மேற்கொண்டுள்ளனர்.

   சாராயம், கள்ளுக்கடைகளை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்.

  தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 22, 23, 24 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மற்றும் மது அருந்த அனுமதி பெற்ற ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மீறிச் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai