சுடச்சுட

  

  மாநில அந்தஸ்துக்கு தடை: காங்கிரஸைக் கண்டித்து ஏப்ரல் 20-ல் பந்த்

  By புதுச்சேரி,  |   Published on : 11th April 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதைத் தடுக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து வரும் 20-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என மாநில அந்தஸ்து போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

   இது தொடர்பாக அதன் தலைவர் டி.சுரேஷ் நந்தா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  கடந்த 23 ஆண்டுகளாக மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி உள்ளார். மாநில அந்தஸ்து பெற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முட்டுக்கட்டையாகச் செயல்படுகிறார்.

   புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டதற்கு விதிகள் பொருந்தவில்லை என மத்திய அரசு குறிப்பிட்டது.  ஆனால், ஆந்திர மக்களின் எதிர்ப்பையும் மீறி சீமாந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு நிதி தந்துள்ளது.

   புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரக்கோரி காங்கிரஸ் முதல்வர் வைத்திலிங்கம் முதல் தற்போதைய முதல்வர் ரங்கசாமி வரை சட்டப்பேரவையில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தனர். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

   மாநில அந்தஸ்து கேட்பதை குறைகூறும் நாராயணசாமி, சிறப்பு மாநில அந்தஸ்தை எப்படி பெற்றுத் தருவார் எனத் தெரியவில்லை.   நாங்கள் என்.ஆர்.காங்கிரஸை தேர்தலில் ஆதரிக்கிறோம்.

   புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை நாராயணசாமி பெற்றுத் தராததையும், மத்திய காங்கிரஸையும் கண்டித்து வரும் 20-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் சுரேஷ்நந்தா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai