சுடச்சுட

    

    காரைக்காலில் கட்டட வேலையின்போது, புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

    காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியைச்  சேர்ந்த முருகேசன் மகன் திருமுருகன் (21).  இவர் காசாக்குடிமேடு கிராமத்தில் ஒரு கட்டடப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தார். கட்டடத்தில் உள்ள கம்பியை அறுப்பதற்கு மின் சாதனத்தை பயன்படுத்தியுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    சம்பவ இடத்திலிருந்து அவர் தூக்கியெறியப்பட்டார். சகப் பணியாளர்கள் அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai