சுடச்சுட

  

  நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வேண்டுமெனக் கூறி பாமகவினர் காரைக்காலில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனர்.

  புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பாமக ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தனித்தனியே மோடி பிரதமராக வேண்டுமெனக் கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  புதுவையில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இங்கு பாமகவும் தனித்துப் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமனுக்கு மதிமுக ஆதரவளிக்குமென அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

  பாமக வேட்பாளருக்கு ஆதரவாக காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க. தேவமணி தலைமையில் திருநள்ளாறு வட்டாரத்தில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யப்பட்டது.

  காரைக்காலில் தேர்தல் பணிகளை பார்வையிட புதுவை மாநில வன்னியர் சங்கத் தலைவர் வேணுகோபால், பாமக புதுச்சேரி மாவட்டத்  தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலர்  மதியழகன், தேர்தல் பொறுப்பாளர்கள் கணபதி, ஜெயராமன் ஆகியோர் காரைக்காலுக்கு புதன்கிழமை வந்து, மாவட்டச் செயலர் க. தேவமணி உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினர்.

  தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. புதுவையில் இக்கூட்டணி இல்லை. பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் மட்டுமே உள்ளது. இதனால் பாமக புதுவையில் தனித்துப் போட்டியிடுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai