சுடச்சுட

    

    "ரங்கசாமியின் பொய்ப் பிரசாரத்தை மக்கள் முறியடிக்க வேண்டும்'

    By புதுச்சேரி  |   Published on : 11th April 2014 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் ரங்கசாமியின் பொய்ப் பிரசாரத்தை மக்கள் முறியடிக்க வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

     புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் அவர் புதன்கிழமை இரவு வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் செய்தார். அப்போது நாராயணசாமி பேசியதாவது:

    முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ரங்கசாமி லாஸ்பேட்டை தொகுதி பக்கம் கூட  எட்டிப் பார்க்கவில்லை. அவருக்கு மக்களை பார்க்கவே நேரம் கிடைக்கவில்லை, டென்னிஸ் விளையாடுவதற்கு மட்டும்தான் நேரம் உள்ளது. 

     லாஸ்பேட்டை தொகுதி அரசு ஊழியர்கள்,  நடுத்தர மக்கள், நெசவாளர்கள் அதிகம் வாழும் பகுதி. இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் ரங்கசாமி செய்யவில்லை. அரசு ஊழியர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதில் அவர் அக்கறை செலுத்தவில்லை.

     நெசவாளர்களுக்குத் தேவையான பாவுநூல், சாயமிடுதல் போன்ற தொழில் முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தொழில் நசிந்தபோது அவர்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை. குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை.

     சாதாரண பிரச்னையைக் கூட தீர்க்க முடியாத ரங்கசாமியால் எப்படி புதுவை மாநில வளர்ச்சிக்கு உதவிட முடியும். இந்த பிரசாரத்தை நீங்கள் முறியடிக்க வேண்டும். 

     புதுவைக்கு மத்திய அரசிடமிருந்து அதிகளவு நிதியை பெற்றுத் தந்துள்ளேன். அதிகளவு ரயில்களை இயக்க முடிந்தது. இந்த சாதனைகள் மேலும் தொடர வரும் தேர்தலில் காங்கிரûஸ வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் நாராயணசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai