சுடச்சுட

    

    ரங்கசாமி இரட்டை வேடம்:இந்திய ஜனநாயக கட்சி குற்றச்சாட்டு

    By புதுச்சேரி,  |   Published on : 11th April 2014 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் பாஜக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சியினர் என்.ஆர். காங்கிரûஸ குற்றம் சாட்டி பாமகவை ஆதரிக்க வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அக் கட்சியின் மாநில அமைப்பாளர் ச.சத்தியவேல் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ரங்கசாமி  வீட்டிலும், அலுவலகத்திலும் சோனியா காந்தியின் படத்தை வைத்துக் கொண்டு, பாஜக கூட்டணியில் இருப்பதாகச் சொல்லி, மோடியின் படத்தை வைத்து வாக்குக் கேட்டு வருகிறார்.

    என்.ஆர். காங்கிரஸ் தனிக்கட்சி எனக் கூறிக் கொள்ளும் ரங்கசாமி, காங்கிரஸிலிருந்து வேறுபட்டது என்பதை நிரூபிக்க சோனியா படத்தை அகற்றுவாரா.

     மோடி உணர்வுடன் செயல்படும் பாஜகவினர் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.  தமிழகத்தின் கூட்டணி நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, பாமகவை ஆதரிக்க வேண்டும் என்று அறிக்கையின் வாயிலாக கூட்டணி கட்சியினரை இந்திய ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai