சுடச்சுட

  

  வரும் தேர்தலில் வாக்களிப்போம்: பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 11th April 2014 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் மக்களவைத் தேர்தலில் பழங்குடியின மக்கள்  வாக்களிப்பர் என பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  புதுச்சேரி மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

  புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். கடந்த 8-ம் தேதி நெட்டப்பாக்கம் பழங்குடி நலச் சங்கத்தினர் தேர்தலை பழங்குடியின மக்கள் புறக்கணிப்பதாகவும், நோட்டாவில் வாக்களிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். அது அவரது தனிப்பட்ட கருத்து.

   பழங்குடியின மக்கள் மிகவும் ஏழ்மைநிலையில் உள்ளனர். அவர்களுக்கான இடஒதுக்கீடுக்காகவும், அடிப்படை வசதிக்காகவும் மத்திய, மாநில அரசுகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துப் போராடி வருகிறோம்.

   பழங்குடியின மக்கள் சார்பில் புதுவையில் உள்ள 57 கிளை சங்கங்களுடனும், 36 மகளிர் குழு நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினோம். அதில் வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்துப் பழங்குடியின மக்களும் வாக்களிக்க முடிவு எடுத்துள்ளோம். நாங்கள் தனிப்பட்ட முறையில் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

   எங்களுக்கு அடிப்படை வசதியும், இடஒதுக்கீட்டையும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி தந்தால் ஏழை குடும்பங்கள் முன்னேறும் என்றார் ராம்குமார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai