சுடச்சுட

    

    அடகு கடைக்காரர் கொலை:விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By புதுச்சேரி  |   Published on : 12th April 2014 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை நகை அடகுக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் என வர்த்தகர்கள் வெள்ளிக்கிழமை காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுவை வர்த்தகச் சபைத் தலைவர் கே.ஏ.செண்பகராஜன், பொதுச் செயலர் தணிகாசலம் ஆகியோர் தலைமையில் வர்த்தகர்கள், நகை அடகுக் கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி பி.காமராஜை சந்தித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது: புதுவை, நெல்லித்தோப்பில் கடந்த சனிக்கிழமை காலை அடகுக் கடை உரிமையாளர் ராதேஷாம் கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வழங்கவும், கொள்ளை போன நகைகளை விரைவில் மீட்டுத் தரக் கோரியும் டிஜிபி பி.காமராஜிடம் வர்த்தகச் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

    இது குறித்து சீனியர் எஸ்பி ஓம்வீர்சிங் கூறுகையில், இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு புதுவை, தமிழகப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai