சுடச்சுட

  

  புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஜெ.ஜெ. நகர் பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். இந்திய குடியரசுக் கட்சி தலைவர் அன்புசெல்வம், மாநிலத் தலைவர் சிவக்குமார்,ஜெ.ஜெ. நகர் பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர்.

  ஏம்பலம் தொகுதி: ஏம்பலம் தொகுதிக்குள்பட்ட பாலமுருகன் நகரில் என்.ஆர். காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு என்.ஆர். காங்கிரஸ் அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai