சுடச்சுட

    

    அழைப்பிதழில் முதல்வர் படம்:தேர்தல் விதிமீறல் வழக்கு

    By புதுச்சேரி  |   Published on : 12th April 2014 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக நுகர்வோர் தின விழா அழைப்பிதழில் முதல்வர் படம் இடம் பெற்றதால் தொண்டு நிறுவன நிர்வாகி மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிந்துள்ளனர்.

    புதுவை அருகே உள்ள கொம்பாக்கம் செங்கேணியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம். தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி. இவர் கடந்த சனிக்கிழமை உலக நுகர்வோர் தினத்தையொட்டி விழா நடத்தினார். இதற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் முதல்வர் ரங்கசாமியின் படம் இருந்ததாகத் தெரிகிறது.

    இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரவிச்சந்திரன் வியாழக்கிழமை போலீஸில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து நாகரத்தினம் மீது தேர்தல் விதிகளை மீறியதாக முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai