சுடச்சுட

  

  நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 24-ம் தேதி புதுச்சேரியில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பாக தொழிலாளர் துறை ஆணையர் ஜி.ஸ்ரீநிவாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  வரும் 24-ம் தேதி (வியாழக்கிழமை) புதுவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்கள், கடை மற்றும் இதர நிறுவனங்களில் வேலை செய்யும் தினக்கூலி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

  வாணிபம், வியாபாரம், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தால் அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

  அந்நபருக்கு ஊதியக் குறைப்போ, பிடித்தமோ செய்யக் கூடாது. மேலும் அவருக்கு விடுமுறை தராத பட்சத்தில் அவருக்கு என்ன ஊதியம் கிடைக்குமோ அதை தர வேண்டும். இது தொடர்பாக விதிமீறல் இருந்தால் இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார் ஸ்ரீநிவாஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai