சுடச்சுட

    

    காங்கிரஸ் வேட்பாளருக்கு புதுவை கிறிஸ்தவர் கூட்டமைப்பு ஆதரவு

    By புதுச்சேரி,  |   Published on : 12th April 2014 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு தருவது என புதுவை கிறிஸ்தவர் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

    கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவர் எஸ்.ஏ.ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலர் ஜோசப் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கிளடியோ அகாசி, ஜெயராஜ், ஆப்ரகாம், சூசை, அஜிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் அரணாக காங்கிரஸ் கட்சியே உள்ளது. இனிவரும் காலங்களிலும் அதை பின்பற்றுவர்.

    புதுவையில் மதச்சார்பற்ற தன்மையை காங்கிரஸ் கட்சியும், மத்திய அமைச்சர் நாராயணசாமியும் பாதுகாத்து வருகின்றனர். வரும் தேர்தலில் அவருக்கு கூட்டமைப்பு ஆதரவு தரும். தலித் கிறித்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்

    சேர்ப்பது, ரங்கநாத் மிஸ்ô, சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai