சுடச்சுட

  

  : காரைக்கால் கைலாசநாதர் கோயில் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு கைலாசநாதர் - சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

  காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  இதைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.

  வியாழக்கிழமை இரவு கைலாசநாதர் பரதேசி கோலத்தில் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுந்தராம்பாள் - கைலாசநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

  பரிசம், மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் முடிந்து சிவாச்சாரியார் சுந்தராம்பாளுக்கு திருமாங்கல்யத்தை சூட்டினர். தொடர்ந்து சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.

  திருக்கல்யாண நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஏ. ராஜராஜன் வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  சனிக்கிழமை (ஏப்.12) தேரோட்டம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்.15) தெப்ப உத்ஸவம் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai