சுடச்சுட

  

  தலைவர்கள் வருகையின்மையால் உற்சாகம் இழந்த தொண்டர்கள்

  By காரைக்கால்  |   Published on : 12th April 2014 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசாரம் செய்ய தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இதுவரை வராததால், கட்சித் தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.

  புதுவை மக்களவைத் தொகுதியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் பிராந்திய மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில் புதுச்சேரியும், காரைக்காலும் தமிழக எல்லைக்குள்ளும், மாஹே கேரளத்திலும், யேனம் ஆந்திரத்திலும் உள்ளன.

  புதுச்சேரி தொகுதி 8.80 லட்சம் வாக்காளர்களை கொண்டதாகும். புதுச்சேரிக்கு அடுத்தபடியாக காரைக்கால் 2-வது பெரிய பிராந்தியமாகும். இங்கு மட்டும் 1.45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வேட்பாளரின் வெற்றிக்கு புதுவை, காரைக்கால் வாக்காளர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  புதுச்சேரி தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளதால், கட்சியின் அகில இந்திய, தமிழகத் தலைவர்கள் புதுச்சேரியில் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், காரைக்காலில் கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் என யாரும் இதுவரை பிரசாரத்திற்கு வரவில்லை. மேலும், அடுத்து 10 நாள்களுக்குள் யாரும் பிரசாரத்துக்கு வருவதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. இதனால், கட்சித் தொண்டர்களிடையே உற்சாகம் குறைத்துள்ளது.

  தேர்தலில் பிரசாரம் செய்ய தமிழக கட்சித் தலைவர்கள் இடங்களை தேர்வு செய்யும் முன்னரே, புதுவை தொகுதிகளின் கட்சி வேட்பாளர்கள், உரிய முறையில் முன்கூட்டியே அவர்களை அணுகி பிரசாரத்தில் காரைக்கால் பகுதியையும் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தாததே காரணம் என்கின்றனர் காரைக்கால் வாக்காளர்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai