சுடச்சுட

  

  "தொழில் வளர்ச்சி சீர்குலைவுக்கு காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் தான் காரணம்'

  By புதுச்சேரி  |   Published on : 12th April 2014 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி சீர்குலைந்ததற்கு காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

  புதுவை ஊசுடு தொகுதியில் திமுக வேட்பாளர் நாஜிம் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அவரை ஆதரித்து மாநில அமைப்பாளர் சுப்பிரமணியன் பேசியது: சேதாரப்பட்டு தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. தற்போது பல ஆலைகள் மூடப்பட்டு விட்டன. இதற்கு காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் தான் காரணம். தொழில் வளர்ச்சியை இரு கட்சிகளும் சீர்குலைத்து விட்டன.

  திமுக ஆட்சியின் போது விவசாயம் செழிப்பாக இருந்தது. பாசிக் நிறுவனம் விவசாயத்துக்குத் தேவையான பொருள்களை விற்பதில்லை. மாறாக மதுபாட்டில்களை விற்று வருகிறது. விவசாயிகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரையும் சீரழித்து வருகிறது.

  தலித்துக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற நோக்கில் தான் சிறப்புக்கூறு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்நிதி முறையாக அவர்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவில்லை.

  புதுவையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. மேலும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனமும் தரப்படுவதில்லை. இதனால் புதுவையில் பால் உற்பத்தி கணிசமாகக் குறைந்து விட்டது.

  இந்நிலை மாற திமுக வேட்பாளர் நாஜிமை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணியன்.

  சேதாரப்பட்டு, பிள்ளையார்குப்பம், தொண்டமாநத்தம், கரசூர், துத்திப்பட்டு, ராமநாதபுரம், புது காலனி, பழைய காலனி, கூடப்பாக்கம், ஊசுடு, அகரம், சேந்தநத்தம்பேட், ஊசுட்டேரி, கோபாலன்கடை, குருமாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

  இப் பிரசாரத்தில் நிர்வாகிகள் இளஞ்செழிய பாண்டியன், மனோகர், லோகையன், ராமமூர்த்தி, ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai