சுடச்சுட

  

  புதுச்சேரி எம்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமி சனிக்கிழமை மாஹே பிராந்தியத்தில் பிரசாரம் செய்கிறார்.

  மத்திய அமைச்சர் நாராயணசாமி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அமைச்சர் நாராயணசாமி 5-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

  இந்நிலையில் திறந்த ஜீப்பில் தொகுதி வாரியாக வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் செய்து கை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்து வருகிறார்.

  காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, மணவெளி, அரியாங்குப்பம், பாகூர், ஏம்பலம், உப்பளம், உருளையன்பேட்டை, திருபுவனை, லாஸ்பேட்டை ஆகிய தொகுதிகளில் நாராயணசாமி தனது பிரசாரத்தை முடித்துள்ளார்.

  வெள்ளிக்கிழமை அவர் இல்லத்தில் பல்வேறு மக்களை சந்தித்தார். எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தினார். தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலையில் மாஹே செல்லும் அவர் எம்எல்ஏ வல்சராஜ், முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து மாஹே, பள்ளூர் பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று திறந்த ஜீப்பில் வாக்குச் சேகரிக்கிறார்.

  ஞாயிற்றுக்கிழமை மாலை வில்லியனூரில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

  தொடர்ந்து 14, 15 ஆகிய தேதிகளில் காரைக்காலில் தொகுதி தோறும் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் நாராயணசாமி பிரசாரம் செய்கிறார். 16-ம் தேதி ஏனாம் செல்லும் அவர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் எம்எல்ஏவுடன் பிரசாரம் செய்கிறார். 17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை புதுவையில் விடுபட்ட தொகுதிகளில் நாராயணசாமி வாக்குச் சேகரிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai