சுடச்சுட

    

    பல் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    By புதுச்சேரி,  |   Published on : 12th April 2014 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி பிள்ளையார்குப்பம் இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லூரி, பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகம் ஆகியன சார்பில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக துணை வேந்தர் சேதுராமன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கருணாநிதி உஷா முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தீபக்குமார் பல் மருத்துவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.

    முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    பின்னர் பல் மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கும் நடைபெற்றது. பல் மருத்துவர் விஜயலட்சுமி ஆச்சார்யா எதிர்காலம் நம் கையில் என்ற தலைப்பில் பேசினார்.

    டாக்டர்கள் யோகன், குழந்தைவேலு, தங்கவேலு ஆகியோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai