சுடச்சுட

  

  புதுவையில் திமுக வேட்பாளர் நாஜிமை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் 18 இடங்களில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார்.

  இது தொடர்பாக மாநில அமைப்பாளர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

  வேட்பாளர் நாஜிமை ஆதரித்து ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

  காலாப்பட்டு மாத்தூர் சாலை சந்திப்பு, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, லெனின் வீதி, ராஜா தியேட்டர், சின்னக்கடை சந்திப்பு, முதலியார்பேட்டை வானொலி திடல், கதிர்காமம் மருத்துவக் கல்லூரி, ஐயனார் கோவில் சந்திப்பு, மூலக்குளம் சந்திப்பு, வில்லியனூர் ஏழை மாரியம்மன்கோவில் சந்திப்பு, அரியூர், மதகடிப்பட்டு, கரியமாணிக்கம், கரிக்கலாம்பாக்கம் சந்திப்பு, தவளக்குப்பம் சந்திப்பு, அரியாங்குப்பம் சந்திப்பு, கிருமாம்பாக்கம், பாகூர் வேப்பமரம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் மாலை 4 மணி முதல் பிரசாரம் செய்கிறார்.

  பிரசாரத்துக்கு வரும் அவரை வரவேற்பதற்காக மாநில திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  இதில் கட்சியின் நிர்வாகிகள், அனைத்துப் பிரிவினர் திரளாக பங்கேற்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai