சுடச்சுட

  

  மக்களை சாதகமாக வாக்களிக்கக் கோரி எம்எல்ஏக்கள் மிரட்டுகின்றனர்

  By புதுச்சேரி  |   Published on : 12th April 2014 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்கக் கோரி தொகுதி மக்களை எம்எல்ஏக்கள் மிரட்டி வருகின்றனர் என மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  காங்கிரஸ் கட்சி அல்லாத ஆளும் கட்சி மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களை மிரட்டும் வகையில் ஈடுபட்டுள்ளனர்.

  ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டு காலம் இருப்பதாகவும், இந்த தேர்தலுக்குப் பிறகு நலத் திட்டங்களுக்காக தங்களையே அணுக வேண்டியிருக்கும் என்றும், எனவே தங்களுக்குச் சாதகமாக வாக்களித்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என மிரட்டுகின்றனர்.

  அதோடு மட்டுமின்றி தங்கள் கட்சிக்கு சாதகமாக வாக்களிக்காவிட்டால் பல தொல்லைகளை சந்திக்க நேரிடும் என்றும் பயமுறுத்துகின்றனர். இதற்கு மக்கள் ஒருபோதும் அடி பணிய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

  நிலையான ஆட்சியையும், வளர்ச்சியையும் காங்கிரஸால் மட்டுமே அளிக்க முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருகிற 2016 சட்டப்பேரவைத் தேர்தலையும் காங்கிரஸ் கட்சி தனித்தே சந்திக்க தற்போதே தயாராகி வருகிறது என்றார் சுப்பிரமணியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai