சுடச்சுட

  

  "மதவாதம், ஊழலை எதிர்க்க இடதுசாரிகளுக்குத் தான் தகுதி'

  By புதுச்சேரி  |   Published on : 12th April 2014 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊழலையும் மதவாதத்தையும் எதிர்க்க இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சிகளுக்கும் தகுதி இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  புதுச்சேரியில் போட்டியிடும் இடதுசாரிக் கூட்டணியின் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு வாக்குச் சேகரிக்கும் பிரசாரக் கூட்டம் மதகடிப்பட்டு கடைவீதியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் பிரதேச செயலர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், கலிவரதன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், ஆர்எஸ்பி மாநிலத் தலைவர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷணன் பங்கேற்று பேசியது:

  புதுதில்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மதச்சார்ப்பற்ற கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் அதிமுக சார்பில் கையெப்பமிட்டு சில தினங்களில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.

  தேர்தல் பிரசாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசை விமர்சித்து வரும் அவர் ஏன் பாஜகவையும், அதன் பிரதமர் வேட்பாளாரையோ ஏன் விமர்சிக்க வில்லை.

  இன்றைக்கு ராமர்கோவில் கட்டுவோம் என்று வெளிப்படையாக பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும் இது குறித்து எந்த பதிலையும் ஜெயலலிதா கூறாதது ஏன்?

  காங்கிரஸ், பாஜகவோடு எந்த வித தொடர்பும் இல்லை என்று கருணாநிதி இன்றைக்கும் வெளிப்படையாக தனது நிலையை அறிவிக்க மறுத்து வருகிறார்.

  வரலாறு காணாத வகையில் அலைக்கற்றை ஊழலில் சிக்கிய திமுகவை தமிழ் மக்கள் புறக்கணிக்கத் தயாராகி விட்டனர்.

  இந்நிலையில் தான் மாற்றுக் கொள்கையை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் இன்றைக்கு தேர்தலை சந்திக்கவுள்ளனர்.

  இந்த தேர்தல் இடதுசாரி கட்சிகளுக்கு திருப்பு முனையாக அமையும்.

  ஊழலையும்,மதவாதத்தையும் எதிர்க்க இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சிகளுக்கும் அருகதையில்லை.

  மதவாத கட்சியோடு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருப்பது எதிர்காலத்தில் பல தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

  காங்கிரஸ் பாராம்பரியத்தில் வந்த ரங்கசாமியின் இந்த முடிவு புதுச்சேரி மக்களை ஏமாற்றும் செயல். அவரது கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  ஊழலில் சிக்கியுள்ள காங்கிரஸ்,திமுக, மதவாத கட்சிகளுக்கு மாற்றாக உள்ள இடதுசாரி கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு கதிர்அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

  இதேப்போல் திருக்கனூரிலும் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai